அனைவருக்கும் வணக்கம்.. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தகவல்கள்
முதலில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மற்றும் அய்ஷ்மன் பாரத் என்று அழைக்கப்படும் நமது கிராமங்களில் பாமர மக்கள் கூறும் மோடி காப்பீடு திட்டம் இரண்டுமே நமது மாநிலத்தில் ஒன்றுதான். அதெப்படி என்ற கேள்வி உங்களுக்குள் எழும்?
அது என்னவென்றால் ஏற்கனவே இந்தியாவிற்கு முன்மாதிரியாக திகழும் நம் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் ஏறக்குறைய ரேசன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 3 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கியது..
தற்பொழுது தான் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு 5 லட்சம் வழங்குகிறது. எனவே நமது மாநில அரசு மத்திய அரசின் பங்கினையும் சேர்த்து 5 லட்சமாக மருத்துவக் காப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு அட்டை இருந்தாலே தமிழக மக்கள் 5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.
5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறும் வழிமுறைகள்:
1. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரம் மிகாமல் இருக்க வேண்டும்
இதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம்(VAO) கீழேயுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கையொப்பம் வாங்கி வரவேண்டும்
2.ஸ்மார்ட் கார்டு (ரேஷன் கார்டு) அசல் மற்றும் நகல் வைத்திருக்க வேண்டும்
3. ஸ்மார்ட் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டு அசல் மற்றும் நகல் வைத்திருக்க வேண்டும்
4. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்பத்தலைவர் அல்லது கார்டில் உள்ள உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவதற்கான ஒரு அலுவலகம் உள்ளது அங்கு சென்றவுடன் புகைப்படம் எடுப்பார்கள். பின்னர் URN நம்பர் என்று சொல்லக்கூடிய எண் உங்களுக்கு வழங்கப்படும்.. அவ்வளவுதான் தற்பொழுது நீங்கள் 5 லட்சம் மருத்துவ காப்பீடு இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.. நன்றி


0 Comments